இஸ்ரோ சிவன் தடையாக இருந்தாரா? சோம்நாத் சுயசரிதையால் சர்ச்சை! – வெளியீடு நிறுத்திவைப்பு!

ஞாயிறு, 5 நவம்பர் 2023 (12:04 IST)
இஸ்ரோ நிறுவனத்தின் தற்போதைய தலைவர் சோம்நாத் எழுதிய அவரது சுயசரிதை புத்தகம் சில சர்ச்சைகளால் வெளியிடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.



இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் தற்போதைய தலைவராக உள்ளவர் சோம்நாத். இவரது தலைமையின் கீழ் இஸ்ரோ சந்திராயன் 3, ஆதித்யா எல் 1 ஆகிய விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந் நிலையில் சோம்நாத் தனது பயணத்தை நிலவு குடிச்ச சிம்ஹங்கள் என்ற பெயரில் சுயசரிதை புத்தகமாக வெளியிடுகிறார்.

அடுத்த வாரம் இந்த புத்தக வெளியீடு நடைபெற இருந்த நிலையில் தற்போது திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தான் இஸ்ரோ தலைவராக வருவதற்கு முன்னாள் தலைவரான சிவனின் குறுக்கீடு பிரச்சனையாக இருந்ததாக அவர் கூறியதாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சோம்நாத் “நான் யார் ஒருவரையும் குறிப்பிட்டு அவர் எனக்கு தடையாக இருந்தார் என்று சொல்லவில்லை. எனக்கு பயணத்தில் பல்வேறு தடைகளை நான் சந்தித்தாக மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். எனினும் இந்த சர்ச்சைகளை கலைவதற்காக புத்தக வெளியீடு தற்போதைக்கு நிறுத்தி வைக்க பதிப்பாளர்ரிடம் கூறியுள்ளேன்“ என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்