யுவ்ராஜ் சிங்குக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சி!

சனி, 26 ஆகஸ்ட் 2023 (07:14 IST)
2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை நாயகன் யுவ்ராஜ் சிங், அதற்கடுத்து 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடர்களில் விளையாட முடியாத சூழல் உருவானது. ஆனால் இடையிடையில் அவர் அணிக்குள் வருவதும் மீண்டும் தூக்கப்படுவதுமாக இருந்தார். பின்னர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்திய கிரிக்கெட்டின் முக்கியமான நடுவரிசை பேட்ஸ்மேனான யுவ்ராஜ் சிங் ஹசல் கீச் என்ற மாடல் நடிகையைத் திருமணம் செய்துகொண்டார். இவர் தமிழில் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு சில வருடங்களுக்கு முன்னர் ஆண்குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இப்போது அவர்களுக்கு இரண்டாவது குழந்தையாக பெண்  குழந்தை பிறந்துள்ளது. இதைப் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் யுவ்ராஜ் சிங்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்