இந்தியர்களின் அடையாளங்களில் ஒன்றான ஆதார் எண்ணை கிட்டத்தட்ட அனைத்து ஆவணங்களிலும் இணைக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் முயற்சித்து வரும் நிலையில் ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களில் கணக்கை தொடங்கவும், இமெயில் கணக்கை தொடங்கவும் ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. போலி சமூக வலைத்தள கணக்குகளை இதன்மூலம் தடுக்க முடியும் என்பதே இதன் நோக்கமாக கூறப்பட்டது.
இந்த வழக்கில் வாதாடிய மத்திய அரசு வழக்கறிஞர் ஆதார் எண்களை சமூக வலைத்தளங்களில் இணைப்பதற்கு பதிலாகவும், இணையதள குற்றங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் புதிய விதிகள் வகுக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞர் வாதாடினார். இதுகுறித்து விரைவில் முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.