இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் என்று அழைக்கப்படும்(IRCTC) இனையதளம் முடக்கப்பட்டதாகவும், அதிலிருந்த ஏராளமான பயணிகளின் தகவல்களை மர்ம கும்பல் திருடியுள்ளதாகவும் வெளியான தகவல் பீதியை கிளப்பியுள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலம், ஆன்லைனில் கோடிக் கணக்கான பயணிகள் தினமும் ரயில் டிக்கெட் பதிவு செய்கின்றனர். அதில் அவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி எண், பேன் நம்பர் என அனைத்து தகவல்களும் பதிவு செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அந்த இணையதளத்தை சிலர் முடக்கி, ஏராளமான தகவல்களை திருடி, அவற்றை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு கொடுத்துவிட்டதாக ஒரு ஆங்கில செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆனால்,இதுபற்றி கருத்து தெரிவித்த ஐ.ஆர்.சி.டி.சி மக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் தத்தா ‘ இணையளத்தை யாரும் முடக்கவில்லை. இருந்தாலும் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளோம். விசாரணை நடைபெற்று வருகிறது’ என்று கூறியுள்ளார்.