பிணைக்கைதிகளாக இருந்த 39 இந்தியர்கள் கொலை; சுஷ்மா சுவராஜ் தகவல்

செவ்வாய், 20 மார்ச் 2018 (13:16 IST)
ஈராக்கில் பிணைக்கைதிகளாக அடைக்கப்பட்டிருந்த 39 இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
2014-ம் ஆண்டு பஞ்சாப், பீகார், மேற்கு வங்காளம் மற்றும் இமாசலப்பிரதேசத்தை சேர்ந்தவ 39 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். அரசு அவர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இருந்தபோதிலும் அவர்கள் அனைவரும் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். டி.என்.ஏ பரிசோதனையின் மூலம் அந்த 39 பேரும் காணாமல் போன இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் என்று தெரியவந்துள்ளது. 
 
இதனையடுத்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் என சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாரளுமன்றத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இறந்த இந்தியர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்