சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் குற்றச்சாட்டை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட்: ஆந்திராவில் பரபரப்பு..!

Mahendran

வியாழன், 5 டிசம்பர் 2024 (11:22 IST)
ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரித்த ஐபிஎஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் சிஐடி தலைவராக சஞ்சய் என்பவர் பதவி வகித்தார். அப்போது, பல அரசியல் தலைவர்கள் மீது வழக்குகள் விசாரணை செய்யப்பட்டது. சஞ்சய் தான் அந்த வழக்குகளை விசாரணை செய்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கை சஞ்சய் விசாரணை செய்ததின் அடிப்படையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட வழக்கிற்கு காரணமான ஐபிஎஸ் அதிகாரி சஞ்சய் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ஆந்திரா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சஞ்சய், ஒரு கோடி ரூபாய் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில தலைமைச் செயலாளர், சஞ்சயின் சஸ்பெண்ட் உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், சஞ்சய் மீது விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்