இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதால் இந்தியா பாகிஸ்தனை தனிமைப்படுத்தவும், அந்நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தவும் காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியா மீது மீண்டும் இம்மாதிரியான தாக்குதல் நடக்கவிருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இப்படிப்பட்ட வெளிப்படையான மிரட்டலும், உளவுத்துறையின் எச்சரிக்கையும் வந்துள்ளதால் இந்தியா தரப்பில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிகப்படும் என தெரிகிறது. அதோடு, புல்வாமா தாக்குதலுக்கே பாகிஸ்தானை பழிதீர்க்க வேண்டும் என காத்திருப்பதால், நிச்சயம் இந்த சதித்திட்டம் முறியடிக்கப்படும் என தெரிகிறது.