புல்வாமா அட்டாக்கில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.110 கோடி கொடுத்த விஞ்ஞானி!

புதன், 6 மார்ச் 2019 (07:30 IST)
சமீபத்தில் நிகழ்ந்த புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு தனியார் அமைப்புகளும், பொதுமக்களும் நிதியுதவி செய்து வரும் நிலையில் இந்திய விஞ்ஞானி ஒருவர் ரூ.110 கோடி நிதியுதவி செய்யவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இந்திய விஞ்ஞானி முர்தசா அலி என்பவர் புல்வாமா தாக்குதலில் பலியான வீர்ர்களின் குடும்பத்திற்கு ரூ.110 கோடி அளிக்க முன்வந்துள்ளார். இவர் பிரதமர் மோடியிடம் நேரம் கேட்டுள்ளதாகவும், நேரம் கிடைத்தவுடன் பிரதமரின் நிவாரண நிதியில் ரூ.110 கோடியை டெபாசிட் செய்வார் என்றும் தகவல்கள் வந்துள்ளன.
 
புல்வாமா தாக்குதலில் 40 இந்திய வீரர்களை இழந்துள்ளோம். அவர்களுடைய குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தே இந்த தொகையை பிரதமரின் நிவாரண நிதியில் அளிக்க முன்வந்துள்ளேன் என்று முர்தசா அலி கூறியுள்ளார். இவர் ஜிபிஎஸ், கேமிரா இல்லாமல் ஒரு வாகனம் எங்கே உள்ளது என்பதை கண்டுபிடித்து சாதனை செய்த விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்