இந்திய ஓட்டுநர் பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தபோதே உயிருடன் எரிப்பு
சனி, 29 அக்டோபர் 2016 (19:03 IST)
ஆஸ்திரேலியாவில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் எரித்து கொல்லப்பட்டார்.
பஞ்சாபை பூர்வீமாகக் கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த மன்மீத் அலிஷேர். ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
இவர் பேருந்தை ஓட்டி கொண்டிருந்த போது, பேருந்தில் இருந்த பயணி ஒருவர் திடீரென்று மன்மீத் அலிஷேர் மீது தீ வைத்து கொளுத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை அறிந்த காவலர்கள் தீ வைத்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலைக்கான பின்னணி எதுவும் தெரியவில்லை என காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தின் போது பேருந்தில் பயணம் செய்தவர்கள் பெரும் பாலானோர் வெளிநாட்டவர்கள் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பேருந்து முழுவதும் எரியாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.