நெதர்லாந்து நாட்டின் ஹாக்யூ நகரில் குல்பூஷண் ஜாதவ் வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணை நேரில் பார்க்க இந்திய, பாகிஸ்தான் அதிகாரிகள் உள்பட பலரும் வருகை தந்தனர். இந்த நிலையில் விசாரணையை காண வந்த அனைவருக்கும் பாகிஸ்தான் அட்டர்னல் ஜெனரல் கைகுலுக்கி வந்தபோது இந்திய அதிகாரிகள் மட்டும் அவருக்கு கைகுலுக்க மறுத்துவிட்டனர். இதனால் ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் அட்டர்னல் ஜெனரல், அதன் பின் அடுத்த அதிகாரியிடம் கைகுலுக்க சென்றுவிட்டார்.