இந்தியாவில் இப்போது விறுவிறுப்பாக கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய ஊசிகள் அதிகளவில் போடப்படுகின்றன. இருந்தாலும் வெளிநாட்டு ஊசிகளும் போடப்படுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் இருந்து இரு தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டு இங்கிலாந்து செல்பவர்கள் சான்றிதழ் அளித்தாலும் இங்கிலாந்து அரசு அதை ஏற்காமல் 10 நாட்கள் அவர்களை தனிமைப்படுத்துகிறது.
இது குறித்து மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்நிலையில் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக இங்கிலாந்தில் இருந்து யார் வந்தாலும், இரு தடுப்பூசி போட்டிருந்தாலும் அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.