நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக அதிகரிப்பு

சனி, 30 ஆகஸ்ட் 2014 (12:32 IST)
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் குறித்த புள்ளிவிவரத்தை மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ளது. இதில் ஏப்ரல் முதல், ஜூன் வரையிலான காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் சுரங்க துறை உற்பத்தியை எடுத்துக்கொண்டோமானால் 2.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டில் 3.9 சதவீதம் சரிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 
மற்றொரு துறையான நிதி சேவையைப் பார்த்தால் 10.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தயாரிப்பு துறையின் உற்பத்தி 3.5 சதவீதம் வளர்ச்சி பாதைக்குத் திரும்பியுள்ளது. ஆனால் கடந்த நிதியாண்டில், 1.2 சதவீதம் என்ற அளவில் பின்னடைவை சந்தித்துள்ளது இத்துறை.
 
இதேபோல் மின்சாரம், எரிவாயு துறைகள் தலா 10.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. போக்குவரத்து, தகவல் தொடர்பு ஆகியவை முறையே 2.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
 
ஆனால் வேளாண் துறை வளர்ச்சி 3.8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்