இந்திய ராணுவ வீரர்களின் வாகனம் விபத்து....16 வீரர்கள் உயிரிழப்பு

வெள்ளி, 23 டிசம்பர் 2022 (15:58 IST)
சிக்கிம் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரர்களின் வாகனம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

சிக்கிம் மா நிலம்  சட்டான் என்ற இடத்தில் இருந்து தாங்கு என்ற பகுதிக்கு இந்திய ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

அப்போது, ஜூமா என்ற பகுதியில் வளைவில் வாகனம் திரும்பியபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த திடீர் விபத்தில், 16 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும், இதில், காயமடைந்த 4 வீரகளுக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
Edited By Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்