உக்ரைன் இந்தியர்களை மீட்க விரைகிறது இந்திய விமானப்படை: பிரதமர் தீவிர ஆலோசனை

செவ்வாய், 1 மார்ச் 2022 (13:38 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் ஏராளமான இந்தியர்கள் அங்கு பதுங்கு குழிகள் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக உள்ளனர் 
 
முதல் கட்டமாக உக்ரைன் நாட்டில் சிக்கியிருந்த மாணவர்களை மீட்க ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் அடுத்தடுத்து விமானங்கள் அனுப்பப்பட்டு மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். 
 
இந்த நிலையில் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படையை பயன்படுத்த பிரதமர் மோடி தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட இந்திய விமானப்படைக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்திய விமானப் படையின் நவீன ரக விமானங்கள் விரைவில் மீட்பு பணியில் களமிறக்கப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்