உக்ரைன் மக்களின் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமா? இங்கிலாந்து பகீர் தகவல்!

செவ்வாய், 1 மார்ச் 2022 (13:36 IST)
உக்ரைன் மக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து தெரிவித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
உக்ரைன் நாட்டின் மீது கடந்த 6 நாட்களாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா இதுவரை ராணுவ தளங்கள் மற்றும் அரசாங்க அலுவகங்களை நோக்கி மட்டுமே தாக்குதல் நடத்தி வருகிறது 
 
இந்த நிலையில் மக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தி ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்ய வீரர்களின் உயிர் சேதத்தை தவிர்க்க இரவில் மட்டுமே தாக்குதல் நடத்தவும் ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது 
 
எனவே இன்று முதல் தாக்குதல் தீவிரமாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால் உக்ரைன் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்