தங்கள் நாட்டு கச்சா எண்ணெய்யை குறைந்த விலையில் விற்பதாக, ரஷ்யா கூறியதை இந்தியா ஏற்றுக்கொள்வது குறித்து யோசித்து வருகிறது என இரு இந்திய அதிகாரிகளை மேற்கோளிட்டு ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
யுக்ரேன் மீது ரஷ்யா தொடர் தாக்குதலை நடத்திவரும் நிலையில், சர்வதேச பணப்பரிவர்த்தனை சேவை அமைப்பான ஸ்விஃப்ட்டிலிருந்து சில ரஷ்ய வங்கிகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு தடைகளை மேற்கு நாடுகள் ரஷ்யா மீது விதித்துள்ளன.
ஆனால், எண்ணெய் விலை அதிகரித்துவருவதால், அதன் எரிசக்தி மீதான செலவைக் குறைக்கும் வழிகளை இந்திய அரசு ஆலோசித்துவந்ததாக, ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.