அந்நிய முதலீட்டை அதிகம் ஈர்த்த நாடுகள்; 5வது இடத்தில் இந்தியா! – ஐ.நா தகவல்!

செவ்வாய், 22 ஜூன் 2021 (10:35 IST)
கொரோனாவால் பொருளாதார மந்தநிலை நிலவிய நிலையிலும் உலக அளவில் அதிகமான அந்நிய முதலீடுகளை இந்தியா ஈர்த்துள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு முதலாக கொரோனா பாதிப்புகள் உலக பொருளாதாரத்தையே முடக்கியுள்ளன. இந்நிலையில் உலக நாடுகள் பல அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதில் பின் தங்கியுள்ளது. 2019ல் 1.5 ட்ரில்லியன் டாலர்களாக இருந்த உலகளவிலான அந்நிய முதலீடு கடந்த ஆண்டில் 1 ட்ரில்லியன் டாலராக சுருங்கியது.

இப்படியான மந்த நிலையிலும் இந்தியாவில் அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டில் 51 பில்லியனாக இருந்த அந்நிய முதலீடு 2020ல் 64 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. பல நாடுகள் பொதுமுடக்கம் காரணமாக தொழில்நுட்ப வசதிகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்ட நிலையில், இந்தியாவில் ஐ.டி மீதான முதலீடு அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆண்டில் அதிக முதலீடுகளை ஈர்த்த நாடுகளில் இந்தியா 5வது இடத்தை அடைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்