இந்திய வணிகர்களின் அதிரடி முடிவு.. துருக்கியின் ரூ.1500 கோடி வணிகம் போச்சா?

Siva

செவ்வாய், 13 மே 2025 (19:15 IST)
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக, துருக்கியில் இருந்து இனிமேல் ஆப்பிள்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என இந்திய வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். இதன் பின்னணியில், துருக்கி நாட்டிற்கு சுமார் ₹1,500 கோடி வியாபார நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் ராணுவ தாக்குதலில் ஈடுபட்டன. அந்த நிலையில், பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் பல துருக்கி நாட்டில் இருந்து வாங்கப்பட்டன என்பது தெரியவந்தது. இதன் மூலம், பாகிஸ்தானுக்கு துருக்கி முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது என்பதும் உறுதியாகியுள்ளது.
 
இந்த சூழலில், புனே பகுதியில் உள்ள வியாபாரிகள், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட துருக்கி ஆப்பிள்களை புறக்கணிக்க முடிவு செய்ததாக அறிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களுக்கு துருக்கியில் இருந்து ஆப்பிள்கள் இறக்குமதி செய்கிறோம். இந்த வியாபாரம் ₹1,200 கோடி முதல் ₹1,500 கோடி வரை இருக்கும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, இந்தியா முதலில் உதவி செய்த நாடாக இருந்தது. ஆனால், அதற்கான பதிலாக துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதால், இனிமேல் அந்நாட்டிலிருந்து ஆப்பிள்களை இறக்குமதி செய்யமாட்டோம் என வியாபாரிகள் கூறியுள்ளனர். இந்த முடிவு, அந்நாட்டின் வணிக மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்