இந்த நகரங்களில் பெண்கள் மீதான குற்றம் குறைவு! – முதல் 2 இடங்களில் தமிழக நகரங்கள்?

வியாழன், 16 செப்டம்பர் 2021 (09:00 IST)
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக மற்றும் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ள நகரங்கள் மற்றும் குறைவாக உள்ள நகரங்கள் குறித்த பட்டியலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டில் பதிவான வழக்குகளின்படி 19 நகரங்கள் இடம்பெற்றுள்ள இந்த பட்டியலில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவாக உள்ள நகரங்களில் கோவை முதல் இடத்தையும், சென்னை இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது.

கோவையில் சராசரியாக 1 லட்சம் பெண்களில் 9 பெண்களுக்கு எதிரான குற்றம் சம்பவங்களும், சென்னையில் 1 லட்சம் பெண்களுக்கு 13 பேருக்கு குற்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகம் நடக்கும் நகரங்களில் உத்தர பிரதேசத்தின் லக்னோ முதலிடத்தில் உள்ளது. இங்கு 1 லட்சம் பெண்களுக்கு 190 பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்