நீங்க மோசமானவங்களா இருக்கலாம்; நாங்க பாசமானவங்க! – சீன வீரரை திரும்ப ஒப்படைத்த இந்தியா

புதன், 21 அக்டோபர் 2020 (10:14 IST)
சீனா – இந்தியா இடையே எல்லை மோதல் இருந்து வரும் நிலையில் வழி தவறி வந்த சீன ராணுவ வீரரை பத்திரமாக இந்திய ராணுவம் திரும்ப ஒப்படைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்னதாக லடாக் எல்லைப்பகுதியில் சீன – இந்திய படைகளிடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பு வீரர்களும் உயிரிழந்தனர். இதனால் இருநாடுகளிடையே எல்லையில் பதற்றம் எழுந்துள்ள நிலையில் இருதரப்பிலும் எல்லையில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று சீன ராணுவ வீரர் ஒருவர் இந்திய எல்லைப்பகுதியில் சுற்றி திரிந்ததை பார்த்த இந்திய வீரர்கள் அவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரித்ததில் அவர் வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்தது தெரிய வந்துள்ளது. அவருக்கு தேவையாம உணவு, உடை ஆகியவற்றை வழங்கிய இந்திய ராணுவம், இன்று சுசூல் மோல்டா எல்லைப்பகுதியில் அந்த சீன வீரரை மீண்டும் சீனாவிடம் ஒப்படைத்துள்ளனர்.

முன்னதாக இதுபோல வழிதவறி வந்த சீன பயணிகளுக்கு இந்திய ராணுவம் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்