சூப்பர் ஸ்டார்களின் வீடுகளில் ரெய்டு – அதிர்ச்சி அளித்த வருமானவரித்துறை !

வியாழன், 3 ஜனவரி 2019 (15:27 IST)
கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாரின் மகன்களான ஷிவ ராஜ்குமார் மற்றும் புனீத் ராஜ்குமார் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடியாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மறைந்த கன்னட சூப்பர் ஸ்டாரின் மகன்களான ஷிவ ராஜ்குமார் மற்றும் புனீத் ராஜ்குமார் இருவரும் இப்போது கன்னட திரையுலகில் தற்போது முன்னனி நடிகர்களாக இருந்து வருகின்றனர்.

இன்று காலை திடீரென வருமான வரித்துறையினர் பெங்களூருவில் உள்ள ஷிவ் ராஜ்குமார் மற்றும் புனீத் ராஜ்குமார் ஆகியோரின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். இவர்கள் மட்டுமல்லாமல் முன்னணி தயாரிப்பாளரான ரக்லைன் வெங்கடேஷ் வீடு மற்றும் அலுவகலங்களிலும் சோதனைகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் கன்னடத் திரையுலகில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

ஆனால் இந்தச் சோதனையில் ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்ற விவரம் எதுவும் இதுவரைக் கிடைக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்