இத்திருமணத்திற்கு முன்பு மணப்பெண் பிரியங்கா குமாரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜிதேந்திர விஸ்வகர்மா என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், இவர்கள் இருவீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
இதனால், பிரியங்கா குமாரியை அவரது பெற்றோர் மனோஜ்குமார் சிங்கிற்கு திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் பிரியங்கா, காதலர் ஜிதேந்திராவை மறக்க முடியாமல், அவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். ஓடிப்போய் இருவரும் திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்து, வீட்டை விட்டு ஓடிவிட்டனர்.
இதுபற்றி மனோஜ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர் கோபப்படாமல், தன் மனைவியை அவரது காதலரிடம் ஒப்படைத்தார். இவ்விவகாரம் போலீஸுக்கு சென்ற நிலையில் யாரும் புகாரளிக்காத நிலையில், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.