திமுகவுடன் கூட்டணியால் காங்கிரஸின் வளர்ச்சி பாதிப்பு - கே.எஸ். அழகிரி

திங்கள், 23 மே 2022 (23:52 IST)
ராஜீவ் கொலை வழக்கில் சுமார் 30 ஆண்டுகளாகக சிறையில் இருந்த பேரறிவாளன் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி விடுதலை செய்யப்பட்டார்.

இதற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவும் வரவேற்பும் தெரிவித்தாலும், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டமும் விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர். இதனால் கூட்டணியில் விரிசல் விழுமோ என்ற தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்  கே.எஸ். அழகிரி ஆங்கில   நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டியளித்துள்ளார்.

அதில்,ராஜீவ் காந்தியைக் கொலை செய்த குற்றத்திற்காக தண்டனை பெற்ற பேரறிவாளனை காந்தி குடும்பத்தினர் பெருந்தன்மையுடன் மன்னித்துள்ளனர். அதை மக்களுக்கும் ஏற்க வேண்டும் என்பது தவறு. தன்னை சுட்ட கோட்சேவை மன்னிக்குபடி காந்தி கூறினார், ஆனால், சட்டம் அவரை தூக்கில் போட்டது.

பேரறிவாளனை விடுவித்ததை எங்களால் ஏற்க இயலாது. 1998 ஆம் அஅண்டு  கோவை குண்டுவெடிப்பு கைதாகி சிறையில் இருப்பவர்களையும் விடுவிக்க வேண்டியதுதானே?

தமிழகத்தில் காங்கிரஸ் மேற்கொண்ட கூட்டணிகள் கட்சியை பல்வீனப்படுத்திவிட்டது. கூட்டணி அரசியல் காங்கிரஸில் வளர்ச்சியை பாதித்துவிட்டது. அதனால், காங்கிரஸ் வளர்ச்சி பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்