சொந்த ஊர்களுக்கு செல்ல லாரியில் ஏறிய தொழிலாளர்கள்: பலியான பரிதாபம்!

சனி, 16 மே 2020 (08:19 IST)
உத்தர பிரதேசத்தில் சொந்த ஊர்களுக்கு லாரியில் செல்ல முயன்றவர்கள் விபத்தில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பேருந்து, ரயில்கள் என அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ள நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் பலர் நடந்தே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். தற்போது தொழிலாளர்களை அழைத்து செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையிலும் நடந்து செல்லும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. மேலும் சில தொழிலாளிகள் கிடைக்கும் வாகனங்களில் எல்லாம் ஏறிக்கொண்டு சொந்த ஊர் செல்ல முயல்கின்றனர்.

அவ்வாறாக ராஜஸ்தானில் இருந்து சொந்த ஊர் செல்ல லாரியில் பயணித்துள்ளனர் தொழிலாளர்கள் சிலர். அவர்களது வாகனம் உத்தர பிரதேசத்தில் உள்ள ஆரையா என்ற பகுதிக்கு விடியற்காலை வேளையில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மற்றொரு லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் உறங்கிய தொழிலாளர்கள் சிலர் இறந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்குவதற்குள், மற்றொரு கோர விபத்து ஏற்படிருப்பது பலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்