கொரோனா வைரஸ் நாடு முழுவதும் முக வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் தூய்மைப் பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், போலீஸார் ஆகியோர் மக்களுக்கு அயராமல் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் எவரேனும் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும் என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.