திறக்கப்பட உள்ள இடுக்கி அணை: ஆயத்த பணியில் கேரள அரசு!

திங்கள், 30 ஜூலை 2018 (18:32 IST)
கேரள மாநிலம், இடுக்கியில் உள்ளது இந்த இடுக்கி அணை. குறவன் மலை, குறத்தி மலை ஆகிய இரு மலைகளையும் இணைத்து ஒரு அரைவட்டம் போன்று, பெரியாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது. 
ஆசியாவிலேயே கட்டப்பட்ட வளைவு அணைகளில் இடுக்கி அணை மிகப்பெரியதாகும். கடந்த 1969 ஆம் ஆண்டு அணை கட்டும் பணி துவங்கப்பட்டு 1973 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்தது.
 
இந்நிலையில், கேரளாவில் பெய்துவரும் தீவிரமான தென்மேற்கு பருவமழையால், அணை நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 2,403 அடியில் இப்போது, 2,395 அடிக்கும் மேல் தண்ணீர் நிறம்பியுள்ளது. 
 
எனவே, அணை திறப்பதற்கான நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரமாக செய்து வருகிறது. 26 ஆண்டுகளுக்கு பின்னர் அணை திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
இடுக்கி அணை திறக்கப்படுவதால், செருதோனி ஆற்றில் வெள்ளம் ஏற்படும், எனவே, தரைப்பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறதாம். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்