நீரவ் மோடியால் சிக்கும் அடுத்தடுத்த வங்கிகள்....

செவ்வாய், 6 மார்ச் 2018 (16:22 IST)
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.12,700 கோடி சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாக வைர வியாபாரி நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தற்போது இவர் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். 
 
இந்த வழக்கில் பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் பங்கு அதிகமாக இருப்பதாக வெளியில் தெரிந்தாலும், அதில் மேலும் 31 வங்களுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த 31 வங்களில் ஐசிஐசிஐ வங்கிக்கும் ஆக்சிஸ் வங்கிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 
 
ஆக்சிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி இந்த மோசடியில் மொத்தமாக ரூ.3,000 கோடி வரை உதவி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், ஐசிஐசி வங்கியின் நிர்வாக இயக்குனரான சந்தா கோச்சாருக்கும், ஆக்சிஸ் வங்கியின் தலைவர் ஷிகா சர்மா ஆகியோருக்கு சம்மன் அளிக்கப்பட்டு இருக்கிறது. 
 
இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் 29 பேருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட இருக்கிறதாம். மேலும் சில முக்கியமான வங்கிகள் இந்த பட்டியலில் கீழ் வர இருக்கிறது. 
 
நீரவ் மோடி விவகாரம் பல வங்கிகளை அடுத்தடுத்து சிக்கவைக்கவுள்ளது. 31 வங்கிகளில் இரண்டு வங்களின் பெயர் வெளியாகியுள்ள நிலையில், மீதம் உள்ள வங்கிகளில் பெரிய வங்களின் பெயரும் அடிபடலாம் என தெரிகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்