பெண் ஐ.ஏ.எஸ் பூஜா கேத்கர் முன் ஜாமீன் மனு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Siva

செவ்வாய், 30 ஜூலை 2024 (17:43 IST)
இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பெண் ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்,  தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி ஆக பணியாற்றிய பூஜா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கினார். இதனை அடுத்து அவர் இட ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்யப்பட்டு வந்தது.

மேலும் பூஜா மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் தற்போது அவர் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் பூஜாவின் முன்ஜாமீன் மனு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக அதில் ஸ்ரீவஸ்த்வா ஆஜராக உள்ளதால் ஒத்தி வைக்குமாறு கோரிக்கை வைத்தார்.

இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி முன் ஜாமீன் மீதான மனுவை நாளை காலை 10 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்