துயரங்களை அனுபவித்தேன் ; மீண்டு வருவேன் - நடிகை பாவனா உருக்கம்

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (15:51 IST)
துன்பங்களிலிருந்து மீண்டு வருவேன் என பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட நடிகை பாவனா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
பாவனாவைக் கடத்தல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இதில் முக்கிய குற்றவாளிகளான பல்சர் சுனி மற்றும் விஜீஸ் இருவரையும் சமீபத்தில் போலீஸார் விசாரித்தனர். அதில், பாவனாவிடம் நிறையப் பணம் இருக்கிறது. என் காதலியுடன் ஆடம்பரமாக வாழ பணம் தேவைப்பட்டது. பணத்துக்காகத்தான் பாவனாவை கடத்தினோம். பாவனா போலீசில் புகார் செய்யமாட்டார் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்ததற்கு மாறாக புகார் செய்துவிட்டார். காருக்குள் பாவனாவை மிரட்டி சித்ரவதை செய்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்தோம். போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த செல்போனை கழிவுநீர் ஓடையில் வீசி விட்டோம் என்று கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் பாவனா சமீபத்தில் பிரிதிவிராஜுடன் நடிக்கும் படத்திற்காக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதேபோல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “வாழ்க்கை என்னை சிலமுறை கீழே தள்ளியிருக்கிறது. நான் சந்திக்க விரும்பாத விஷயங்களை அது எனக்கு காட்டியுள்ளது. துயரங்களையும், தோல்விகளையும் அனுபவத்தவள் நான். ஆனால், அதிலிருந்து நான் எப்போதும் மீண்டு வருவேன். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் பிரார்த்தனைக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்