ராகுல் காந்தி சொன்னதன் அர்த்தத்தை புரிந்துகொண்டேன் - ஸ்மிருதி இரானி
திங்கள், 27 மே 2019 (17:44 IST)
அமேதியை அன்பாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று ராகுல் சொன்னதன் அர்த்தத்தை நான் தற்போது புரிந்துகொண்டதாக ஸ்மிருதி இரானி கூறியுள்ளார்.
சமீபத்தில் அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளரான ஸ்மிருதி ராணியின் வெற்றிக்கு தகுந்த ஆலோசனை நடத்தி பிரச்சார யுக்தியை செயல்படுத்திய பிரசார உதவியாளரும் முன்னாள் கிராமத் தலைவருமான சுரேந்திர சிங் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற ஸ்மிருதி இரானி அவரது உடலை பாடையில் சுமந்து சென்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது :
சுரேந்திரசிங் கொலை மூலமாக அமேதி தொகுதியை பயங்கரவாத பகுதியாக மாற்ற முயற்சிகள் நடந்துவருகிறது. ஆனால் அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக்கூடாது.
பாஜகவினர் அமைதி காக்க வேண்டும்.மேலும் அமேதி தொகுதியை அன்பாகப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற ராகுல்காந்தி சொன்னதன் பொருள் தனக்கு இப்போது புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.