ரயில்வே பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி அமைப்பு ’ஐ-டிக்கெட்’ என்ற டிக்கெட் முன்பதிவு சேவையை 16 வருடங்களுக்கு முன்பாக அறிமுகப்படுத்தியது. இந்த சேவை மூலம் ரயிலில் பயணம் செய்பவர்கள் தங்களுக்கு தேவையான டிக்கெட்டை தனது வசிப்பிட முகவரியை கொண்டு முன்பதிவு செய்தால். அந்த டிக்கெட் அவரது வசிப்பிடதிற்கு தேடி வரும்.
இந்த டிக்கெட் பயன்பாட்டால் ஊனமுற்றவர்கள், வயதானவர்கள், வெளியூர் வாசிகள், என பலர் பயனைடந்தனர். இதனால் ’ஐ-டிக்கேட்’சேவை முறை மக்களிடத்தில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது.