’’நான் எனது நண்பனை இழந்து விட்டேன்’’ …பிரதமர் மோடி இரங்கல்!

வியாழன், 8 அக்டோபர் 2020 (22:21 IST)
மத்திய இணை அமைச்சரும் எல்ஜேபி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பஸ்வான் காலமானதாக அவரது மகன் சிராக் பஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். தற்போது ராம்விலாஸ் பஸ்வானி ( 74)  மரணம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு சமீபத்தில் இதய அறுவைச சிகிச்சை செய்யப்பட்டது.

இதனால் பாஜக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிரதமர்மோடி கூறியுள்ளதாவது :

என் சோகத்தை சொல்ல வாரத்தைகளே இல்லை; ராம் விலாஸ் பஸ்வானின் இழப்பை ஈடுகட்டமுடியாது…நான் எனது நண்பனையும் மதிப்புமிக்க அரசியல் தலைவரையும் இழந்துவிட்டேன் அவர் ஏழைகளுக்கு உதவுபதில் ஆர்வமுள்ளவர் என்று தெரிவித்துள்ளார்.
பல்வேறு தலைகள் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்