கனடா மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி!

வியாழன், 8 அக்டோபர் 2020 (19:29 IST)
கனடா மாநாட்டில் காணொளி மூலம் கலந்து கொண்ட பிரதமர் மோடி!
பிரதமர் மோடி தற்போது காணொளி மூலம் பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்டு வருகிறார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் தற்போது கனடாவில் நடைபெற்றுவரும் இந்தியாவில் முதலீடு தொடர்பான மாநாட்டில் அவர் கலந்து கொண்டிருக்கிறார் தற்போது அவர் காணொளி மூலம் உரையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த மாநாட்டில் அவர் பேசியபோது ’வங்கி, காப்பீடு நிறுவனங்கள், முதலீடு நிதியங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பு குறித்து பேசினார். மேலும் தொழில் முனைவோர் மற்றும் கடுமையாக உழைப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டிய சூழல் உண்டாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார் 
 
விவசாயத்துறையில் கொண்டு வந்துள்ள மாற்றத்தின் காரணமாக விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்றும் அதுமட்டுமின்றி இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்
 
உற்பத்தி முனைவோர் துறையில் முதலீடு செய்ய கனடா நாட்டவர்கள் முன்வர வேண்டுமென்றும் அதற்கு சிறப்பான இடம் இந்தியா என்றும் அவர் தெரிவித்தார் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருக்கும் பொதுவான அம்சத்தின் மூலம் இரு தரப்புக்கும் இடையிலான உறவு வலுவாக இருப்பதாகவும் அவர் தனது உரையில் கூறினார்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்