மதவாதத்திற்கு எதிராகவும், சமூக நீதியை காக்கவும் உயிருள்ளவரை போராட முடிவு செய்துள்ளதாக கூறிய சித்தராமையா, இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் முன்னேற்றத்திற்காக பின்னணியில் இருந்து செயல்படுவேன் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியினர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவேன் என்றும், இனிமேல் தேர்தல் அரசியல் தன்னிடம் இருக்காது என்றும் முதல்வர் சித்தராமையா மேலும் தெரிவித்தார். இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலோ அல்லது கூட்டணியில் ஆட்சி அமைத்தாலோ வேறு புதிய முதல்வரை தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.