மக்கள் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன்: சொல்வது அமித் ஷா

திங்கள், 9 நவம்பர் 2015 (04:27 IST)
பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில், மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
 

 
பீகார் சட்ட மன்றத் தேர்தலில், நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ்  கூட்டணி மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 178 இடங்களைக் கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. ஆனால், பாஜக தலைமையிலான கூட்டணி வெறும் 58 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றறு. மேலும், இதில் பாஜக 53 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
 
பீகார் தோல்வி குறித்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது பீகார் சட்ட மன்ற தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறேன். இந்த தேர்தலில் வெற்றி பெற்ற முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் கூட்டணிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
 
இதே போல, பிஹார் மாநிலத்தில், நிதிஷ்குமார் 3ஆவது முறையாக மீண்டும் முதல்வர் ஆவதால், அவரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்