நீ நைரோபி.. நான்தான் புரொபஸர்! – மணி ஹெய்ஸ் ஈர்ப்பால் ஆட்களை கடத்திய கும்பல்!

வியாழன், 17 பிப்ரவரி 2022 (13:43 IST)
ஹைதராபாத்தில் மணி ஹெய்ஸ்ட் வெப் சிரிஸால் ஈர்க்கப்பட்டு அந்த பாணியில் ஆள் கடத்திய கும்பலை போலீஸார் பிடித்துள்ளனர்.

வங்கி கொள்ளையை மையப்படுத்தி நெட்ப்ளிக்ஸில் வெளியாகி பெரும் புகழ்பெற்ற வெப் சிரீஸ் மணி ஹெய்ஸ்ட். இந்த மணி ஹெய்ஸ்ட் வெப் சிரீஸால் கவரப்பட்ட கும்பல் ஒன்று அதுபோல மாஸ்க் அணிந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளது.

இந்த கும்பலுக்கு தலைவனான சுரேஷ் தன்னை ப்ரொபஸர் என்று அழைத்துக் கொண்டதுடன், மற்றவர்களும் டோக்கியோ, பெர்லின், நைரோபி என மணி ஹெய்ஸ்ட் கதாப்பாத்திர பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர். 6 பேர் கொண்ட இந்த கும்பலை ஹைதாராபாத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்