ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்றவர் திடீர் மாயம்: ஐதராபாத்தில் பரபரப்பு!

புதன், 15 டிசம்பர் 2021 (13:41 IST)
ஒமிக்ரான் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திடீரென மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஐதராபாத் வந்த மூவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு அறிகுறி இருந்ததை அடுத்து அவர்கள் மூவரும் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டனர் 
 
இதனையடுத்து மூவரும் தங்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த மூவரில் ஒருவர் திடீரென மாயமாகி விட்டதாகவும் அவர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
 
23 வயதான இவரை தேடும் பணியில் மருத்துவத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்