ஒவ்வொரு தாம்பத்ய உறவுக்கும் ரூ.5000 கேட்ட மனைவி.. போலீசில் புகார் அளித்த கணவர்..!

Mahendran

வியாழன், 20 மார்ச் 2025 (11:03 IST)
ஒவ்வொரு தாம்பத்திய உறவுக்கும் ஐயாயிரம் ரூபாய் பணம் கேட்டதாக கூறி, மனைவி குறித்து கணவர் போலீசில் புகார் அளித்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூரை சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஸ்ரீகாந்த் ஸ, கடந்த 2022 ஆம் ஆண்டு பிந்துஸ்ரீ என்பவரை திருமணம் செய்திருந்தார். திருமணமான நாளிலிருந்து தம்பதிகள் ஒற்றுமையாக இல்லை என கூறப்படுகிறது. குறிப்பாக, குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம் என பிந்துஸ்ரீ உறுதியாக கூறியதாகவும், தனது அனுமதி இன்றி கணவர் தொடக்கூடாது என்றும், தொடினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
 
ஒரு கட்டத்தில், கணவருடன் வாழாமல் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில், ஸ்ரீகாந்த் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், திருமணம் ஆனதிலிருந்து தாம்பத்திய உறவு நடக்கவில்லை என்றும், குழந்தை பெற்றால் தனது அழகு கெட்டுப் போய்விடும் என்பதால் குழந்தையை தத்தெடுக்கலாம் என மனைவி பிந்துஸ்ரீ கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், “என்னை மீறி தொடினால் உங்கள் பெயரை எழுதி வைத்து தற்கொலை செய்து கொள்வேன்” என மனைவி கூறியதாகவும், “என்னுடன் தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும் என்றால் ஒவ்வொரு முறைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் தர வேண்டும்” என பேரம் பேசியதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, விவாகரத்து வழங்க வேண்டும் என்றால் 45 லட்ச ரூபாய் கேட்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
இந்த மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், பிந்துஸ்ரீயிடம் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில், தனது கணவர் ஸ்ரீகாந்த் தன்னிடம் வரதட்சணை கேட்டதாகவும், தன்னை மிரட்டுவதாகவும் பிந்துஸ்ரீ மற்றொரு புகார் அளித்துள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்