ஆன்லைனில் பணம் செலுத்தாமல் ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி தெரியுமா?

வியாழன், 13 ஏப்ரல் 2017 (04:01 IST)
ரயில் பயணம் செய்பவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்தது. இதன் மூலம் ஆன்லைனிலேயே கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் அல்லது நெட் பேங்கிங் மூலம் கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை உறுதி செய்து கொள்ளலாம். இந்நிலையில் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு இல்லாதவர்களும் ஆன்லைனில் டிக்கெட்டுக்கள் புக் செய்யும் புதிய வசதி ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்துள்ளது.



 


இதன்படி பயணிகள் தங்கள் டிக்கெட்டுக்களை ஆன்லைன் மூலம் உறுதி செய்து கொள்ளலாம். பின்னர் ரயில்வே ஊழியர் ஒருவர் உங்களது வீட்டுகே வந்து ஒரிஜினல் டிக்கெட்டை வழங்கிவிட்டு பணத்தை பெற்றுக்கொள்வார். இதற்கு கூடுதல் கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் இந்த முறையில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு பான்கார்டு மற்றும் ஆதார் கார்டு இருக்க வேண்டும்

இந்த வசதியை பயன்படுத்த பயணிகள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், பணம் செலுத்தும் முறையை தேர்வு செய்யும் போது, சி.ஓ.டி., எனப்படும், 'கேஷ் ஆன் டெலிவரி'யை தேர்வு செய்ய வேண்டும்.பயண நாளுக்கு 5 நாட்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்கையில், இந்த வசதியை பயன்படுத்த முடியும். இவ்வாறு முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யும் போது, அதற்கான பணம், பயணியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்