’’வெற்றிநடை போடும் தமிழகம் ’’விளம்பரத்திற்கு செலவு இத்தனை கோடியா?

திங்கள், 22 பிப்ரவரி 2021 (20:48 IST)
தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தமிழகம் முழுவதும் திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபடுள்ளனர். இந்நிலையில் இம்மாத இறுதியில் சட்டமன்றத்  தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக,திமுக ஆகிய கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அடுத்துவரவுள்ள தேர்தலில் மக்களைக் கவர வேண்டி ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் தொடர்ந்து விளம்பரங்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல முன்னணித் தொலைக்காட்சிகள், வானொலி, எஃப்.எம்கள், செய்தித்தாள்களில் எல்லாம் அதிமுக கட்சியினர் ’வெற்றி நடைபோடும் தமிழகமே’ தொடர்ந்து விளம்பரம் செய்துவருகின்றனர்.

சமீபத்தில் திமுக பெண் எம்பி கனிமொழி விளம்பரத்தில் மட்டும்தான் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது, இதற்காக அதிமுக அரசு ஆயிரம் கோடிரூபாய் செலவு செய்துள்ளது  என விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என டிராபிக்ராமசாமி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சில் பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,மக்கள் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டிய பணம் விளம்பரத்திற்காக செலவழிக்கப்படுவதாக திமுக வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். இதற்கு அரசு வழக்கறிஞர், விஜய் நாராயணன், ஆயிரம் கோடி விளப்பரத்திற்காக செலவிடவில்லை என்றுவாதாடி, ஜிஎஸ்டியுடன் சேர்த்து மொத்தம் 64 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் விளம்பரங்கள் கொடுப்பது கடந்த 18 ஆம் தேதியுடன் நின்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தமிழக அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு பதில் அளிக்ககூறி வரும் மார்ச் 2 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்