கர்நாடகாவில் அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு முடிந்தது: காங்கிரசுக்கு உள்துறை

வெள்ளி, 1 ஜூன் 2018 (19:14 IST)
கர்நாடக மாநிலத்தில் வெறும் 38 இடங்களில் வெற்றி பெற்ற மஜத கட்சி ஆட்சி அமைத்துள்ளது. இந்த ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவியேற்ற நிலையில் அமைச்சர் இலாகா பிரிப்பது குறித்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டனர். 
 
இந்த நிலையில் தற்போது காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகாக்கள் விபரங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. இதன்படி  மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு நிதி, பொதுப்பணி, மின்சாரம், போக்குவரத்து, கூட்டுறவு, சுற்றுலா உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு உள்துறை, நீர்பாசனம், சுகாதாரம், வருவாய், வேளாண், வனம், சமூகநலத்துறை, விளையாட்டு உள்ளிட்ட 22 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 
 
இனி யார் யாருக்கு எந்த அமைச்சர் பதவி என்று முடிவு செய்யப்பட்டு பின்னர் அவர்கள் வரும் 6-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்