தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்னும் புதிய கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நிலையில் ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இதன் பாதிப்புகள் தென்பட தொடங்கியுள்ளன. இது உலக நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. பல நாடுகளிலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளிலிருந்து மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, புது வகை கொரோனா புதிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. புதிய வகை கொரோனா பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.