பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பறக்கவிட்ட ஹீலியம் பலூன்.. விபத்தில் 5 பேர் காயம்..!

திங்கள், 2 அக்டோபர் 2023 (13:01 IST)
பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பறக்க விடப்பட்ட ஹீலியம் பலூன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் காயம் அடைந்ததை அடுத்து பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  
 
பெங்களூரில் உள்ள பெலத்தூர் என்ற பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது. இதனை அடுத்து மொட்டை மாடியில் இருந்து ஹீலியம் பலூன் பறக்க விடப்பட்டது.  
 
இந்த பலூன் எதிர்பாராத வகையில் மின் கம்பியின் உரசியதை அடுத்து தீ விபத்து ஏற்பட்டதில் குழந்தைகள் உள்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். கைகள், கால்கள் ஆகிய உடல் பகுதிகளில் பலத்த தீ காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடிய நபர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகிறதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்