விக்கிற விலைவாசியில முந்திரி, பிஸ்தாவா? மக்களவையை கிழிக்கும் குறட்டை சத்தம்

ஞாயிறு, 30 ஜூன் 2019 (11:27 IST)
மத்திய சுகாதாரத்துறையின் கூட்டங்களில் பிஸ்கட் வழங்கப்படுவதை நிறுத்திவிட்டு அதற்கு பதிலாக முந்திரி, பிஸ்தா, பேரீச்சை போன்றவற்றை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

மத்திய சுகாதாரத்துறையின் சார்பில் கூட்டங்கள் நடைபெறும். அந்த கூட்டங்களில் உறுப்பினர்களுக்கு மக்களவை கேண்டீனிலிருந்து டீ, காபி, பிஸ்கட் போன்றவை வழங்கப்படு. இந்நிலையில் பிஸ்கட்கள் வேண்டாம் அதற்கு பதிலாக வறுத்த முந்திரி பக்கோடா, பிஸ்தா, பாதாம் போன்றவையும் உலர்ந்த பழ வகைகளையும் வழங்குவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார்.

இதை மற்ற துறை அமைச்சர்களும் பார்த்துவிட்டு எங்களுக்கும் முந்திரி, பிஸ்தா வேண்டும் என அடம்பிடிக்க ஆரம்பித்தால் மழைகால கூட்ட தொடரில் இதற்கென ஒரு பட்ஜெட் ஒதுக்க வேண்டியதாகிவிடும் போல இருக்கிறது. மேற்கொண்டு சாதாரண நாட்களிலேயே நம்மாட்கள் நிறைய பேர் கூட்டத்தொடரில் தூங்கிவிடுகின்றனர். இந்த நிலையில் விக்கிற விலைவாசியில் முந்திரி, பிஸ்தா இப்போது அவசியம்தானா என்று மக்கள் சிலர் வேடிக்கையாக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்