மேகதாது அணை திட்டத்திற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது - கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அறிவிப்பு

சனி, 29 ஜூன் 2019 (12:49 IST)
தமிழகத்தில் புதிய அணை கட்டினால் கர்நாடகம் எதிர்க்காது என்றும், மேகதாது திட்டத்திற்கு எந்த இடையூறும் செய்ய கூடாது என்றும், கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய சுற்றுச் சூழல் அனுமதி கோரப்பட்டுள்ளது.

மேகதாது அணை திட்டத்தை எதிர்த்து தமிழகத்தில் பல கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மேலும் தமிழக அரசு பிரதமர் மோடிக்கு மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்ககூடாது என கடிதம் எழுதுயுள்ளார்.

இந்நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார். மேகதாது அணை கட்டுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும், 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நீர் மின்நிலையம் அமைக்கும் கர்நாடகத்தின் திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர், கடலில் வீணாக கலக்கும் நீரை தடுக்க தமிழகம் புதிய அணை கட்டினால், அதை கர்நாடகம் எதிர்க்காது எனவும், அதற்கு கர்நாடகம் ஆட்சேபனை தெரிவிக்காது எனவும் கூறியுள்ளார்.

மேகதாது அணை திட்டம், ரூ.400 கோடி செலவில் செயல்படுத்தப்படுகிறது. மேலும் அதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்