ஐஸ்வர்யா ராய் காருக்கு அருகில் சென்ற போது பாதுகாவலர்கள், ரசிகர்களையும் போட்டோகிராபர்களையும் தள்ளி விட்டனர். இதில் ஒருவர் தடுமாறி ஐஸ்வர்யாராயின் தாய் விருந்தா ராய் மீது விழுந்தார். இதனால் விருந்தா ராய் நிலைதடுமாறி கீழே விழுந்து வலியால் அலறினார். மகள் ஆரத்யாவைக் காரின் பின்சீட்டில் அமர வைத்துக் கொண்டிருந்த ஐஸ்வர்யா ராய் தாயின் அலறலால் அதிர்ச்சி அடைந்து, அவரை பார்க்கும் அவசரத்தில் கார் கதவை வேகமாக சாத்தினார். இதில், குழந்தை ஆரத்யாவின் தலையில் அடி பட்டது. இதனால் குழந்தையும் வீறிட்டு அழுதது.
ஒரே நேரத்தில் தாய் மற்றும் மகளுக்கு அடிபட்டதால் அதிர்ச்சியடைந்த ஐஸ்வர்யா ராய், உடனடியாக குழந்தையின் தலையை தேய்த்து விட்டுக் கொண்டே, பின்னால் திரும்பி ‘என் அம்மாவைத் தள்ளி விட்டது யார்?' என கோபத்தில் கத்தினார். ஐஸ்வர்யா ராயின் கோபத்தை பார்த்து அதிர்ச்சியான கூட்டத்தினர் அங்கிருந்து விலகி சென்றனர். பாதுகாவலர்கள் அவரது தாயை தூக்கி விட்டனர். பின்னர் தாயையும், மகளையும் அழைத்துக் கொண்டு ஐஸ்வர்யா ராய் தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.