இதனால், காங்கிரஸுக்கு ஆதாயம் கிடைத்துள்ளது. பட்டேல் சமூகத்தினரின் கோரிக்கையை காங்கிரஸ் ஏற்று கொண்டது. அதாவது, பட்டேல் இனத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை பட்டேல் சமூகத்தின் தலைவர் ஹர்தீக் பட்டேல் தெரிவித்தார்.
இந்நிலையில், ஹர்திக் பட்டேலுக்கு வொய் பிரிவு பாதுகாப்பு வழங்க, மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது குஜராத் மாநில போலீசார் பாதுகாப்பு அளித்துவரும் நிலையில், இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.