மண்டையில் விழுந்த இரும்பு குண்டு: அல்பாய்சில் போன உயிர்

Arun Prasath

வியாழன், 24 அக்டோபர் 2019 (16:20 IST)
17 வயது சிறுவன், தலையில் ஒரு இரும்பு குண்டு ஓங்கி அடித்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த அபீல் ஜான்சன் என்ற 17 வயது சிறுவன், செயிண்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற ஜீனியர் தடகள போட்டியில், “ஹேமர் த்ரோ” பிரிவில் போட்டியாளர்கள் வீசுகின்ற இரும்பு குண்டுகளை சேகரிக்கும் வாலண்டியர் பணியில் ஈடுபட்டிருந்தான்.

அப்போது ஒரு போட்டியாளர் எறிந்த இரும்பு குண்டு ஒன்று எதிரினில் இருந்த அபீலின் தலையில் வந்து விழுந்தது. வேகமாக வந்த இரும்பு குண்டு தலையில் ஓங்கி அடித்ததால், மூளையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதனைத் தொடர்து அபீலை அங்கிருந்தவர்கள் கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் அபீல் சிகிச்சை பலனின்றி உயிரிந்தான். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கோட்டயம் போலீஸார், அப்போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மீது ஐபிசி 338-ன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அபீல் ஜேவ்லின் த்ரோ பிரிவில் ஒரு வீரர் எறிந்த அம்பை சேகரிக்க எடுத்து கொண்டு திரும்பியபோது அவரது தலையில் இரும்பு குண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்