வாரணாசியில் பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார்..! ராகுல் காந்தி கணிப்பு..!!

Senthil Velan

செவ்வாய், 11 ஜூன் 2024 (21:22 IST)
வாரணாசி தொகுதியில் பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி தோல்வி அடைந்திருப்பார் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் உத்திரபிரதேச மாநிலம் மாநிலம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் கே,எல். ஷர்மா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று ரேபரேலி, அமேதி தொகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து வாக்களித்தமைக்கு நன்றி தெரிவித்தனர்.
 
அப்போது பேசிய ராகுல் காந்தி, கடந்த 2014 மற்றும் 2019 ஆகிய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் 2024 தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் குறைந்த வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். 

ALSO READ: அமைச்சரவையில் வாரிசுகளுக்கு இடம்..! ராகுல் காந்தி கடும் விமர்சனம்
 
மேலும் வாரணாசி தொகுதியில்  மோடியை எதிர்த்து எனது தங்கை பிரியங்காவை நிறுத்தியிருந்தால் மோடி நிச்சயம் தோல்வி அடைந்திருப்பார் என்றும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மோடியை, பிரியங்கா வீழ்த்தியிருப்பார் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்