குர்மித் சிங் மகள் விரைவில் கைது? - வெளிநாடு தப்பி செல்ல முடியாமல் நடவடிக்கை

வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (16:16 IST)
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட சாமியார் குர்மித் ராம் ரஹிம் சிங்கின் மகள் ஹனிபிரீத் இன்சானை கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.


 

 
பிரபல ஆன்மீக சாமியார் ராம் ரஹிம் சிங் கடந்த 15 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அரியானா மாநிலத்தில் உள்ள சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டார். 
 
இந்நிலையில், அவரின் வளர்ப்பு மகள் எனக்கூறப்படும் ஹனிபிரீத் இன்சானையும் கைது செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாதவாறு அனைத்து விமான நிலையங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அவர் மீது தேசத்துரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
வெளியில் மகள் எனக் கூறிக்கொண்டாலும், அவர் சாமியாருடன் நெருக்கமாக படுக்கையறையில் இருந்ததை நானே பார்த்தேன் என ஹனிபிரீத்தின் முன்னாள் கணவரே சமீபத்தில் பேட்டி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்